Sunday, July 27, 2008

தவறு செய்கிறாய்!



தவறு செய்கிறாய்!


நான் உன்னைப் பார்ப்பதை

நீ

உறுதி செய்து கொண்டதும்

உன்னில் மாற்றங்கள் பல ...

அதில் ஒன்று

நீ உன்

தாலியை மறைத்துக்கொண்டாய்!


சிந்தை செய்த

சந்தைப்பாதை மடை !


அன்றொரு வியாழன் .

தை பிறக்கும்

ஒரு வாரத்திற்கு முந்தைய சந்தை.

கண்டிப்பாய்

அம்மா சுமந்து வரும்

சந்தை கூடைக்குள்

கொளுத்தாடைகளோடு

நற்கரும்புகளும் இருக்கும் .

என் அம்மா வந்திறங்கினாள்.

எண்ணியபடியே

சந்தைக் கூடையுள் கலப்படம்.

கூடையுள் இருக்கும்

பண்டங்கள் அனைத்தையும்

பகிர்ந்தளித்தாள்.

நாங்கள் எல்லாம்

நற்கரும்புகளை

சுவைத்துக் கொண்டிருக்க

என் தாய் மட்டும்

கடித்துக்கொண்டிருந்தாள்

"கொளுத்தாடைகளை"