மலர்நிலையத்தில்
இதழ் குவிந்திருக்கும் மொட்டுக்களுக்கு
நீ முத்தம் கேட்பதாய் எண்ணி
செடியனுமதியின்றி
எப்படி முத்தம் கொடுத்தாயோ
அப்படித்தான்
நான் கொடுத்த முத்தமும்.
கோபப்படாதே அன்பே
மீண்டும் குவிகிறது உன் உதடுகள்.