உன் கைகளே உன்னை வரையட்டும்...
Saturday, November 8, 2008
Wednesday, July 30, 2008
சட்டம்...
குற்றம் ஒரு வெங்காயம்.
ஒவ்வொரு நீதி மன்றங்களிலும்
ஒவ்வொரு உரியல்.
கடைசியில் வெங்காயமே
காணாமல் போய்விடுகிறது!
*(இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகள் சுமார் 5,07,79,000 க்கு மேலுள்ளதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்)
ஒவ்வொரு நீதி மன்றங்களிலும்
ஒவ்வொரு உரியல்.
கடைசியில் வெங்காயமே
காணாமல் போய்விடுகிறது!
*(இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகள் சுமார் 5,07,79,000 க்கு மேலுள்ளதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்)
Sunday, July 27, 2008
தவறு செய்கிறாய்!
தவறு செய்கிறாய்!
நான் உன்னைப் பார்ப்பதை
நீ
உறுதி செய்து கொண்டதும்
உன்னில் மாற்றங்கள் பல ...
அதில் ஒன்று
நீ உன்
தாலியை மறைத்துக்கொண்டாய்!
சிந்தை செய்த
சந்தைப்பாதை மடை !
அன்றொரு வியாழன் .
தை பிறக்கும்
ஒரு வாரத்திற்கு முந்தைய சந்தை.
கண்டிப்பாய்
அம்மா சுமந்து வரும்
சந்தை கூடைக்குள்
கொளுத்தாடைகளோடு
நற்கரும்புகளும் இருக்கும் .
என் அம்மா வந்திறங்கினாள்.
எண்ணியபடியே
சந்தைக் கூடையுள் கலப்படம்.
கூடையுள் இருக்கும்
பண்டங்கள் அனைத்தையும்
பகிர்ந்தளித்தாள்.
நாங்கள் எல்லாம்
நற்கரும்புகளை
சுவைத்துக் கொண்டிருக்க
என் தாய் மட்டும்
கடித்துக்கொண்டிருந்தாள்
"கொளுத்தாடைகளை"
Friday, July 25, 2008
Thursday, July 24, 2008
மானம் கப்பலேறிப் போயாச்சு...
என்
தமிழினத் தன்மானனே...
வ.வு. சிதம்பரனாரே...
அன்று
கடலில் கப்பலை ஏற்றி - நீ
மானத்தைக் காப்பாற்றினாய்!
இன்று
மானத்தைக் கப்பலேற்றி
கட்சியைக் காப்பாற்றுகிரார்கள்!!
என்னே இந்தியா!
என்னே இந்தியன்!!
(அணுசக்தி ஒப்பந்தத்தில் நிகழ்ந்த
பணசக்தி ஒப்பந்தத்தைப் பற்றிய
வேதனை)
தமிழினத் தன்மானனே...
வ.வு. சிதம்பரனாரே...
அன்று
கடலில் கப்பலை ஏற்றி - நீ
மானத்தைக் காப்பாற்றினாய்!
இன்று
மானத்தைக் கப்பலேற்றி
கட்சியைக் காப்பாற்றுகிரார்கள்!!
என்னே இந்தியா!
என்னே இந்தியன்!!
(அணுசக்தி ஒப்பந்தத்தில் நிகழ்ந்த
பணசக்தி ஒப்பந்தத்தைப் பற்றிய
வேதனை)
'குடி' அரசின் சுழல் நிதிகள்...
ரூபாய் நோட்டுக்களை
நுகர்ந்து பார்த்தேன்.
எல்லாத் தாள்களும்
போதையுடன் இருக்கிறது.
நுகர்ந்து பார்த்தேன்.
எல்லாத் தாள்களும்
போதையுடன் இருக்கிறது.
மண் மோகன்கள்...
நாட்டைச் சீரழிக்கும்
மண் மோகன்களே...
பயிர்களைப் பிடுங்கிவிட்டு
கற்களை நடுவோரே...
விரைவில் நாம்
"சுண்..." னையா திண்பது?
சுண் என்பது
" சுண்ணாம்பைக் குறிக்கும்"
மண் மோகன்களே...
பயிர்களைப் பிடுங்கிவிட்டு
கற்களை நடுவோரே...
விரைவில் நாம்
"சுண்..." னையா திண்பது?
சுண் என்பது
" சுண்ணாம்பைக் குறிக்கும்"
Subscribe to:
Comments (Atom)